3 வயதில் அறிவுஜீவியான சிங்கப்பூர் சிறுமி

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

லண்டனைச் சேர்ந்த அறிவுஜீவிகளின் இயக்கமான மென்சாவில், 3 வயதேயான சிங்கப்பூர் சிறுமி செலஸ்டின் கிரேஸ் கய் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.உலகிலேயே இத்தனை இளம் வயதில் அறிவுஜீவிகள் சங்கத்தில் சேரும் முதல் சிறுமி செலஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது.

செலஸ்டின் கிரேஸுக்கு 3 வருடமும் 10 மாதங்கள் வயது இருக்கும்போதே, மென்சா இயக்கத்தில் சேர்ந்து விட்டார். இவரது அண்ணனும் இவரைப்போலவே. ஆனால் அவர் 5 வயதில்தான் உறுப்பினரானார்.

மென்சா அமைப்பின் இயக்குநர் எட்வர்டு வின்சென்ட் இதுகுறித்துக் கூறுகையில், எனக்குத் தெரிந்தவரை இதுவரை இவ்வளவு இளவயதில் யாரும் பொதுஅறிவு மிக்கவராக மென்சா அமைப்பில் இடம் பெறவில்லை. மிகச்சிறிய வயதில் மென்சாவில் இடம்பெற்றவர் இவரே என்றார்.

செலஸ்டின் 1994 ம் ஆண்டு பிறந்தார். இப்போது நடு நிலைப்பள்ளியில் படிக்கிறார். பொது அறிவிலும், கணிதத்திலும் நுண்ணறிவு பெற்றுத் திகழ்கிறார்.

செலஸ்டினின் தந்தை ஜார்ஜ் சாவா மற்றும் தாய் கிறிஸ்டினா கூறுகையில், எங்கள் மகள் இவ்வளவு இளம் வயதில் மென்சாவில் இடம்பெறுவார் என்றுஎதிர்பார்க்கவில்லை. எங்கள் மகன் கேமிலஸ், மெனசா அமைப்பில் 5 வயதாகும்போது தான் இடம்பெற்றார் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+