பாளையங்கோட்டையில் சாமி சிலை உடைப்பு
நெல்லை:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை காலை சாமி சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த மாதம் 4 கோவில்களில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் இடைந்த இந்து முன்னணி அமைப்பினர்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு நாள் பந்த் நடத்தினர்.
இதையடுத்து போலீஸாரின் தீவிர நடவடிக்கையால் மேலப்பாளையத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு முஸ்லீம்முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இதற்குப்பின் தொடர்ந்து இரண்டு வாரங்களாக நெல்லையில் அமைதி நிலவியது.
இந்நிலையில் திங்கள்கிழமை பாளையங்கோட்டையை அடுத்துள்ள குலவணிகர்புரத்தில் உள்ள இலங்காமணி சாஸ்தா கோவிலில் உள்ள சுடலைமாடசாமி சிலைஉடைக்கப்பட்டது. சுமார் 5 அடி உயரத்தில் வாள் ஏந்திய நிலையில் நிற்கும் அச்சிலையின் மூக்கு, மார்பு, கால் ஆகிய இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கோவில் பூசாரி மாடசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கு ஏற்றும்போது சிலைகளில் சேதம் இல்லை என்றும், மறுநாள் திங்கள்கிழமை காலைவந்து பார்த்த போது சிலை உடைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் அப்பகுதியில் மக்கள் கூடினர். குலவணிகர்புரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
