சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் யார்?
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில், 2007ம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமர் பதவி வகிக்க, தனது மகனும், தற்போதைய துணை பிரதமருமான லீ சியான் லூங்க்-கை,தற்போதைய பிரதமர் கோ சோக் டாங் தேர்வு செய்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளர்.
சிங்கப்பூரின் பிரதமராக கோ சோக் டாங் பதவி வகித்து வருகிறார். துணைப் பிரதமராக இவரது மகன் லீ சியான் லூங் இருக்கிறார். கோ சோக்கின்பதவிக்காலம் 2007 ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
இதையடுத்து பிரதமர் பதவிக்கு வாரிசாக தனது மகனைத் தேர்ந்தெடுத்துள்ளார் பிரதமர் டாங். அவர் கூறுகையில், எனக்குப்பின் சிங்கப்பூரின் அடுத்தபிரதமராக எனது மகன் பதவியேற்பார். அவரால் நல்லாட்சி நடத்த முடியும் என்று நம்புகிறேன்.
நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் நலத்திட்டங்களை என் மகன் தலைமையிலான புதிய குழு செம்மையாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறேன். எனதுமகனைத் தேர்ந்தெடுத்திருப்பதால், கட்சிக்குள் பூசல் ஏற்படாது என்று நம்புகிறேன்.
கட்சியின் வளர்ச்சிக்காகவும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகவும் நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதைவிட சிறப்பாக என் மகன் செய்வார்.இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
எனது கட்சியிலேயே உறுப்பினராகவும், துணைப்பிரதமராகவும் உள்ள லூங்கால் நல்லாட்சி புரிய முடியும் என்று நம்புகிறேன். எனக்குக் கொடுத்து வந்ததுபோல் லூங்குக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமராகவும், தொடர்ந்து 31 ஆண்டுகளாகவும் பதவி வகித்து வந்த லீ க்வான் யூ-வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்தற்போதைய பிரதமர் கோ சோக் டாங். 1990 ம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்தார். இவரது மூத்த மகன்தான் லீ சியான் லூங். 93 உறுப்பினர்கள்கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே லூங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூருக்கு வரும் 2002 ம் ஆண்டு பொதுத்தேர்தல் வருகிறது. இதையடுத்து 2007 ம் ஆண்டு வரை கோ பிரதமராக நீடிப்பார்.












Click it and Unblock the Notifications