72 தொகுகளில் தமிழ் தேசியக் கட்சி போட்டி
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
தமிழக சட்டசபைத் தேர்தலில் 72 தொகுதிகளில் போட்டியிடுவோம் என தமிழ் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கட்சி மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில்நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
வரும் சட்டசபைத் தேர்தலில் 72 தொகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி போட்டியிடும். பரம்பிக்குளம் ஆழியாறு,புன்னம்புழா, அத்திக்கடவு குடிநீர்த் திட்டம் ஆகியற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நல்லாறு நீர்த் தேக்கத்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
தனித் தொகுதியில் அனைத்து தரப்பினரும் போட்டியிடும் வகையில் சுழற்சி முறையில் போட்டியிடும் வகையில்மாற்றி அமைக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications