சென்னையில் பூகம்ப பாதிப்பு
சென்னை:
இந்தியாவின் பல இடங்களில் ஏற்பட்ட நில நடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது.
வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதில்கடுமையாக பாதிக்கப்பட்டது குஜராத் மாநிலம். சென்னையிலும் இந்த நில நடுக்கம்உணரப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், விருகம்பாக்கம், அசோக்நகர்,கோயம்பேடு, நந்தனம், அடையார், அண்ணாநகர், முகப்பேறு, மந்தவெளி, மாம்பலம்,நெற்குன்றம் உட்பட பல இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது.
நந்தனத்தின் நியுடவர் என்ற 10 மாடிக் கட்டிடம் நிலநடுக்கத்தால் ஆடியது. 3-வது மாடிகட்டிட சுவர் இடிந்து விழுந்தது. மக்கள் பயமடைந்தனர்.
நிலநடுக்கம் குறித்து கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், நிலநடுக்கத்தால் வீடுஅதிர்ந்து நான் தலை சுற்றி விழுந்தேன் என கூறினார்.
நிலநடுக்கமா? பேயா?
10 வயது மாணவன் கூறுகையில், நான் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த போது நாற்காலி ஆடியது. நான் பேயின் வேலையால் நாற்காலிஆடுகிறது என பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்றார்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பேராசிரியரும், வக்கீல் ஒருவரும் கூறுகையில்,எங்கள்பகுதியில் நில நடுக்கம் காலை 8.55 மணிக்கு ஏற்பட்டது. இது 20 நொடிகள்நீடித்தது. இந்த நிலநடுக்கத்தை நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர்களால்தான் உணரமுடிந்தது என்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி தென் மண்டல வானிலை ஆய்வக அதிகாரி பட்நாகர்கூறுகையில், குஜராத் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியிலிருந்து 20 கிலோ மீட்டர் வடக்கிலும்,சென்னையிலிருந்து 1.500 கிலோ மீட்டர் வடமேற்கிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளி என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்இந்தியா முழுவதும் ஏற்பட்டது. பூஞ்ச் பகுதியில் அதிக அளவிலும், சென்னையில்லேசாகவும் ஏற்பட்டது என கூறினார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications