எப்படி ஏற்பட்டது பூகம்பம்?

Subscribe to Oneindia Tamil

மும்பை:

கட்ச் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம், நிலத்தின் அடியில் இருக்கும் பாறைகள் இடபெயர்ந்ததால்தான் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் சனிக்கிழமைதெரிவித்தனர்.

குஜராத்தை உலுக்கிய பூகம்பத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.3 என இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது. எனினும் அமெரிக்கநிலநடுக்கத் தகவல் மையம் இதனை 7.9 என கணக்கிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் இந்த அளவு 93 ல் மகாராஷ்டிரா மாநிலம், லாட்டூரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியநிலநடுக்கத்தின் அளவை (6.3) விட அதிகமாகும்.

லாட்டூரைப் போலவே இங்கும் பூகம்பத்திற்கு முன் பல வாரங்கள் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் (ரிக்டர் அளவு 3 முதல் 4 வரை) இருந்திருக்கிறதுஎன இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவிக்கிறது.

பூகம்பத்தை அடுத்து மீண்டும் இப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்படும் என பூகம்ப ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் தெரிவித்ததற்கேற்ப இது வரை 53 முறை (ரிக்டர்அளவு 3.2 முதல் 5.3 வரை) நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இப்பூகம்பத்திற்கு காரணம் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலத்தடி பாறைகளின்இடப்பெயர்ச்சியாகும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+