ம.தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லபட்டார். மேலும் ஒருவர்உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
திருச்சிக்கு அருகே இருக்கும் மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது மேல் பஞ்சாயத்து. இங்கு வசித்த்துவருபவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகன் சங்கர் (31). இவர் ம.தி.மு.க. கிளை செயலளாரக இருப்பவர்.இவர் திருச்சி பர்மா பஜாரில் பணி புரிந்து வருகிறார்.
இதே ஊரில் வசித்து வரும் சேட்டு என்றழைக்கப்படும் கணேசன் (60) என்பவரும், சங்கரும் ஊரில் நடக்கும்நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வந்தனர்.
இதே ஊரில் வசித்து வந்தவர் பாஸ்கர் (25). இவர் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் குடிபோதையில் பெண்களைவம்பிழுத்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிபோதையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் சேலையைபிடித்து இழுத்த குற்றத்திற்காக பஞ்சாயத்தாரின் முடிவின்படி சங்கரும், கணேசனும் பாஸ்கரை மரத்தில் கட்டிசவுக்கால் அடித்துள்ளனர்.
பாஸ்கர் தகாத செயிலில் ஈடுபடும் போது அவரை சங்கரும், கணேசனும் கண்டித்த வந்துள்ளனர். இதனால்கோபமடைந்த பாஸ்கர் வியாழக்கிழமை காலை துடையூர் அருகில் இருக்கும் வாய்காலில் குளிக்கச் சென்ற சங்கரைஅரிவாளால் வெட்டி சாய்த்தார். அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
ஊருக்குள் வந்த பாஸ்கர் எதிரில் வந்த கணேசனையும் வெட்டினார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெட்டிக் கொல்லப்பட்ட சங்கருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு 15 நாட்களில் திருமணம் நடை பெறஉள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்துபாஸ்கரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications