இந்தியாவில் நிலநடுக்கம்... ரஷ்யாவில் பிரார்த்தனை
மாஸ்கோ:
குஜராத் மாநிலம் உள்பட இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சிறப்புபிராத்தனை நடந்தது.
இந்தியாவில் நிலநடுக்கம் என்ற செய்தி பரவியதும், ரஷ்யாவில் வாழும் நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் கூடி விட்டனர்.
அவர்கள் அனைவரும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். குஜராத் மாநிலத்தில் பகுஜ்மாவட்டத்தில் உயிரிழந்த 650 பேரின் குடும்பங்களுக்காக அவர்கள் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர்.
பின்னர் மிக எளிய முறையில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சியின் போது இந்தியாவிற்கானரஷ்ய தூதர் லம்பா கூறுகையில், நாம் 52 வது குடியரசு தின விழா கொண்டாடும் நல்ல நாளில் காலடி எடுத்த வைத்த போதிலும், அதை மகிழ்ச்சியாகக்கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்காகவும், அவர்களின் நலனிற்காகவும்பிரார்த்தனை செய்வதே நமது தற்போதைய நோக்கமாக இருக்க வேண்டும். குடியரசு தின விழாவன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வரலாற்றில்அழிக்க முடியாத கறுப்புச்சின்னமாக அமைந்து விட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டதிலிருந்து இந்தியா - ரஷ்யா உறவு மிகவும்வலிமைடைந்துள்ளது. அவரது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, எண்ணெய் உற்பத்தி, பொருளாதாரம், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றில்ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது இரு நாட்டு அரசியல் தலைவர்களும், மக்களும்பெருமகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நேரத்தில் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது மிகவும் சோகமயமானது என்றார் லம்பா. முன்னதாக, குடியரசு தின விழாவில் அவர் இந்தியதேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், புகைப்பட கண்காட்சிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications