சவக்கிடங்கான மருத்துவமனை
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பூகம்பத்தில் ஏற்பட்ட சாவுகளால் அங்குள்ள மருத்துவமனைகள் சடலங்களால் நிரம்பி வழிகிறது.
அகமதாபாத்தில் உள்ள வாடிலால் சாராபதி மருத்துவமனை முழுவதும் சவக்கிடங்காகி விட்டது. அங்குள்ள பிரேத பரிசோதனை அறையில் சடலங்களைத்தனித்தனியே வைக்க முடியவில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என்று பிணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாகஅடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சர்தார் மருத்துவமனை முதன்மை டாக்டர் ஒருவர் கூறுகையில், ஒரு வயதான தந்தை தனது கடைசி மகனுடன் காயமடைந்த நிலையில் வந்தார். கை, கால்கள்இரண்டும் முறிந்த நிலையில் உள்ள அந்த சிறுவனைக் காப்பாற்றக்கோரி அவர் மன்றாடியதைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது.ஆனால் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை அவரிடம் நான் உறுதி செய்ததைப் பார்த்த போது, அவர் கண்ணீர் மல்க நின்ற காட்சிஎன்னை அழ வைத்தது.
நாங்கள் காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அவர்களில் கணவனை இழந்த மனைவி, குழந்தைகளை இழந்தபெற்றோர், பெற்றோரை இழந்து அனாதையாகத் தவிக்கும் குழந்தைகள் என்று மிகவும் பரிதாபமாக உள்ளது.
பகுஜ் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றி 420 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அனைத்து கிராமங்களும் அழிந்து விட்டன. அந்தகிராமங்களிலிருந்து ஒருவர் கூட பிழைக்கவில்லை. 40 வினாடிகள் தொடர்ந்து பூகம்பம் நீடித்ததால் அவர்கள் மரண ஓலமிட்டுக் கொண்டே இறந்ததுமிகவும் பரிதாபமாக இருந்தது.
பூகம்பம் ஏற்பட்ட போது சாலையில் சென்று கொண்டிருந்த கார் தாறுமாறாக ஓடிக் கவிழந்ததில் அதில் சிக்கிக் கொண்ட சிறுவன் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும், முஸ்லீம் அமைப்புத் தொண்டர்களும் இணைந்து சடலங்களை மீட்டு எங்களது மருத்துவமனைக்குக் கொண்டு வந்துசேர்க்கிறார்கள். ஒரு சோகத்துக்குப்பின் இறந்த இந்து - முஸ்லீம் சகோதரர்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. மனிதநேயஅடிப்படையில் அவர்கள் உதவி செய்து வருகிறார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications