குஜராத்திற்கு உதவுங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, காங்கிரஸ் கட்சியினர் பெருமளவு உதவி செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரில் நடக்கவிருந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமைதெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டை பெங்களூரில் நடத்துவது என்று சோனியா காந்தி முடிவு செய்திருந்தார். அதன்படி பிப்ரவரி மாதம் 14 ம் தேதிமுதல் பெங்களூரில் 3 நாட்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநாட்டுக்காக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி பெங்களூரில் அரண்மனை மைதானத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்தவெள்ளிக்கிழமை குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இந்த துயர சம்பவம் நடந்துள்ள சூழ்நிலையில், காங்கிரஸ் மாநாட்டை ஒத்தி வைக்கவேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருப்பது என்னை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது. மிகப்பெரியஇயற்கைச்சீற்றம் ஏற்பட்டுள்ள இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் குஜராத் மாநில நிலநடுக்கத்திற்கு அதிக நிதியுதவி அளிக்க வேண்டும். தங்கள் நன்கொடையை அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி பொருளாளருக்கோ அல்லது ராஜீவ் காந்தி தேசிய நிவாரண மற்றும் பொதுநல அறக்கட்டளைக்கோ அனுப்பி வைக்கலாம் என்று தனதுஅறிக்கையில் கூறியுள்ளார் சோனியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+