தேசத் தந்தையை நினைவு கூர்ந்தது பாரதம்
டெல்லி:
தேசத் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 53 -வது நினைவு நாளானசெவ்வாய்க்கிழமை தலைவர்கள் பலரும் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி நாதுராம் வினாயக்கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்த தினமான ஜனவரி 30-ம் தேதிதியாகிகள் தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர்வாஜ்பாய், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர்அத்வானி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜக்மோகன், டெல்லி முதல்வர் ஷீலாதீக்ஷித் உள்ளிட்ட பல தலைவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராஜ்காட்டில்அமைந்திருக்கும் காந்தி சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் நடந்த சர்வமத பிரார்த்தனையிலும் அவர்கள் கலந்து கொண்டனர். இந்தபிரார்த்தனையின் போது அனைத்து மத பிரார்த்தனை பாடல்களும் பாடப்பட்டன.
பாகிஸ்தான் தூதர் அஷ்ரப் ஜஹாங்கிர் காஷி, அவரது மனைவி, லெபனான் மற்றும்வங்கதேச தூதர்களும் பஜனையில் கலந்து கொண்டனர். அவர்கள் மகாத்மா காந்திசமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு
ராஜ்காட்டில் முப்படை தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் குஜ்ரால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாது காப்பு செயலாளர் யோகேந்தர் நாராயண் ஆகியோரும்கலந்து கொண்டனர்.
காந்தியின் நினைவு தினத்ததையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்ப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications