அஸ்ஸாமில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தி கொலை வெறித் தாக்குதலில் 5 மரம் வெட்டும் தொழிலாளர்கள்இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை அமைப்பு என்ற தீவிரவாதிகள் இயக்கம்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அங்லாங் மாவட்டம், கர்பி அருகேயுள்ள தங்கசா என்ற இடத்தில்இந்த சம்பவம் நடந்தது.
திங்கள்கிழமை, மொத்தம் 15 மரம் வெட்டும் தொழிலாளர்கள், தங்கசா காட்டுப் பகுதியில் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு, சரமாரியாக சுட்டுத்தள்ளினர்.
இதில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்குபோலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications