குழந்தைகளின் உடல் உறுப்புகளை அகற்றிய டாக்டர்
லண்டன்:
நூற்றுக்கணக்கான இறந்த குழந்தைகளின் உடல்களிலிருந்து உடல் உறுப்புகளைத் திருடிய இங்கிலாந்து டாக்டருக்குவாழ்நாள் தடை விதிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆலன் மில்பான் செவ்வாய்க்கிழமைகூறியதாவது:
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் டாக்டர் டிக் வான் வெல்ஸன். இவர் இங்கிலாந்தில் டாக்டராக இருந்து வருகிறார்.லிவர்பூல் நகரிலுள்ள ஆல்டர் ஹே மருத்துவமனையில் இவர் பணியாற்றுகிறார். தன்னிடம் சிகிச்சைக்காக வரும்குழந்தைகள் இறந்தால், அவர்களது பெற்றோரிடம் தவறான காரணங்களைக் கூறி தப்பித்து வந்துள்ளார்.
போஸ்ட் மார்ட்டத்தின்போது, இறந்த குழந்தைகளின் உடல்களிலிருந்து முக்கிய உறுப்புகளை எடுத்துள்ளார்.பின்னர் குழந்தைகளின் (முக்கிய உடல் உறுப்புகள் இல்லாத) உடல்களை, அவர்களது பெற்றோரிடம்கொடுத்துள்ளார். தங்களது குழந்தைகளின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டது கூட தெரியாமல் அவர்களும் இறுதிக்கடமைகளைச் செய்து வந்துள்ளனர்.
டாக்டர் டிக் வானின் செயல்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இதுவரை 2000-க்கும் மேற்பட்டகுழந்தைகளின் உடல்களிலிருந்து இவ்வாறு அவர் உறுப்புகளை எடுத்துள்ளார். இதயத்தை மட்டுமே அவர் விட்டுவைத்துள்ளார்.
அவரிடம், தற்போது பதப்படுத்தப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான குழந்தைகளின் தலைகள், உடல்கள்,மூளையின் சில பாகங்கள், கண்கள், பிறந்தவுடன் இறந்த சிசுக்கள் உள்ளன. இதுதவிர, 15,000க்கும் மேற்பட்டகருச்சிதைவான சிசுக்களும் உள்ளன.
இந்த டாக்டர் இனிமேல் இங்கிலாந்தில் டாக்டர் தொழிலில் ஈடுபட அனுமதிக்க மாட்டார். அவருக்கு வாழ்நாள்தடை விதிக்கப்படும். அவரது செயல் மன்னிக்க முடியாதது.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காதவாறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலனைசெய்யப்படும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications