தப்பிய தமிழ்க் குடும்பம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் அங்கு வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 நாட்கள் உயிர்ப் போராட்டத்திறகுப் பிறகுமீட்கப்பட்டனர்.
குஜராத் மாநிலம் காந்திதாமில் வசித்து வந்தவர் சில்வோரா செல்லப்பன். இவர் அங்கு கணக்காளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா(40).
கடந்த 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்ட போது கணவன், மனைவி, அவர்களது 6 வயது மகள் ஆகியோர் தங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்தனர்.திடீரென்று கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இவர்கள் சிக்கிக் கொண்ட சமையலறை மட்டும் விழவில்லை. சமையலறையைச் சுற்றியுள்ளஅனைத்து பகுதிகளும் இடிந்து தரைமட்டமாயின.
இவர்கள் சமையலறைக்குள் சிக்கிக் கொண்டதால் இவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. சமையலறையில் இருந்த ஒரு பாட்டில் தண்ணீர்மற்றும் சில தக்காளிப் பழங்களை வைத்து அவர்கள் 6 நாட்களாக உயிர் வாழ்ந்தனர்.
இவர்களது 6 வயது மகள், தண்ணீர், தண்ணீர் என்று தவித்துக் கொண்டேயிருந்தார். அதற்குப்பின் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இவர்களைமீட்டனர்.
அகமதாபாத்தைச் சேர்ந்த வசந்த காந்தி என்ற 51 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மீட்கப்பட்டார். அவர் உடனடியாக மருத்துமனையில்சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலம் தேறி வருகிறார். காந்தியின் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
பூஜ் நகரில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருந்த பிரியங்கா என்ற 13 வயது சிறுமி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்தார். ராணுவவீரர்களும், சர்வதேச மீட்புப் படையினரும் அங்கு சென்று பிரியங்காவை மீட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications