அழிந்த வரலாறு
அகமதாபாத்:
அகமதபாத்தில் உள்ள மியூசியத்தில் பழமையான நகரான ஹரப்பாவிலிருந்து கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் உள்பட வராற்றுமுக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் அனைத்தும் அங்கு ஏற்பட்ட பூகம்பத்தால் பெரிய அளவில் சேதமடைந்து விட்டன.
இது தவிர அகமதாபாத்திலுள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம், மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட குஜராத் வித்யாபீடம், 17 ம்நூற்றாண்டில் நிறுவப்பட்ட பாத்ரா துறைமுகம், சர்தார் படேல் நினைவரங்கம், அகமதாபாத்திலுள்ள மிகப்பெரிய மசூதியான ஜூம்மா மசூதி மற்றும்வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் சேதமடைந்துள்ளன.
பூஜ் நகரில் 113 வருடமாக இயங்கி வந்த மாநில அரசு அருங்காட்சியகம் பெரிய அளவில் சேதமடைந்து விட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த விலைமதிக்கமுடியாத பொருட்களும் பூகம்பத்தால் சேதமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பூஜ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான பொருட்கள் சேதமடைந்து விட்டன என்றே கூறலாம். மேலும் இங்கு வைக்கப்பட்டிருந்த17 ம் நூற்றாண்டு ஓவியங்கள், 7 ம் நூற்றாண்டு புத்தர் சிலை, வைரங்கள், நகைகள், நாணயங்கள், நவீன ரக ஆயுதங்கள் ஆகியவற்றில் சேதம்ஏற்பட்டுள்ளது.
இவைகள் தவிர, கட்ச் மாவட்டத்திலுள்ள மியூசியம், அய்ன மஹாலிலுள்ள மாடன் சின்ஹிஜ் மியூசியம் ஆகியவையும் சிதைந்துள்ளது. கட்ச் மாவட்டத்திலுள்ளவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டிடங்கள், மோர்பி நகர், ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள வானாங்கர், சுரேந்திரநகரிலுள்ள தாரங்கதாராஆகியவை கடும் சேதமடைந்துள்ளன.
இந்திய தொல்பொருள் துறை மூத்த அதிகாரி நாயர் கூறுகையில், நாங்கள் பல மியூசியங்களில் பாதுகாத்து வைத்திருந்த பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
அகமதாபாத்தின் மையப்பகுதியில் உள்ள பாத்ரா துறைமுகம் மிகப்பெரிய சேதமடைந்துள்ளது. சித்தி சையது மசூதியும் சேதமடைந்து விட்டது. இந்த மசூதியில்உள்ள கற்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இவை அனைத்தும் பூகம்பத்தில் உடைந்து விட்டன. ரெய்ப்பூர் கேட்டில் உள்ள 12 கேட்டுகளும்இடிந்து விட்டன. இவை அண்மையில்தான் பழுது பார்க்கப்பட்டன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications