வெள்ளை அறிக்கை கோருகிறது மார்க்சிஸ்ட்.கம்யூ.
புதுவை:
புதுவை நிர்வாகம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும், ஆதிதிராவிடர்களுக்கு 51 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரி, புதுவை பிரிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்தளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட புதுவை நிர்வாகம், அதனை அமல்படுத்தாது கண்டிக்கத்தக்கது. மேலும்,கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுவையின் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும் ;
அரசியல்ரீதியாக பலிவாங்கப்படுவதை ஆட்சேபித்து பிப்ரவரி 9ம் தேதி தேர்தல் அலுவலகம் முன் தர்ணா நடத்தவும்;
காதிவாரிய ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரியும், விவசாயத் தொழிலாளர்களுக்கு காப்பீடுவசதி கோரியும், தீர்மானங்கள் அக்கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications