வாளையாரில் தொடர்ந்து வீரப்பன் வேட்டை
பாலக்காடு:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையார் பகுதியில் வீரப்பனுடன், தமிழக அதிரடிப்படைபோலீஸார் நடத்திய தாக்குதலின்போது வீரப்பன் விட்டுச் சென்ற பொருட்களில் போன் நம்பர்கள் அடங்கியடைரியும், ரூ. 2.92 லட்சம் பணமும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மந்தி மலை என்ற பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மோதல் நடந்தது. வீரப்பன் கும்பல் விட்டுச்சென்ற பொருட்கள் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில், வீரப்பன் கும்பல் விட்டுச்சென்ற பொருட்கள் குறித்து தெளிவான தகவல் சனிக்கிழமை காலை கிடைத்தது.
அதன்படி 2 டைரிகள், 11 தோள் பைகள், ரூ. 2.92 லட்சம் பணம், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்வீரப்பன் கும்பல் விட்டுச் சென்றுள்ளது. இதுதவிர, மொபைல் போன் சார்ஜர், மான் கால்கள், பல பாத்திரங்கள்ஆகியவற்றையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இதன் மூலம் வீரப்பனும், அவனது கும்பலும் அப்பகுதியில்முகாமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
டைரிகளில் பல போன் நம்பர்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இப்போது கூற முடியாது.இதுதவிர,தமிழில் எழுதப்பட்ட சில துண்டுப் பிரசுரங்களும் கூட சிக்கியுள்ளன. மக்கள் போர்க்குழு என்ற தீவிரவாதஅமைப்பு இதை வெளியிட்டுள்ளது.
வீரப்பனுடன் 10 பேராவது இருப்பார்கள் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வாளையார்போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2000-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீஸார், தொடர்ந்து காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில்ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications