விலங்குகளைக் காக்க நிதி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாப்பதற்காக ரூ 50,000 வழங்குவதாகசுற்றுப்புறச்சூழல் வல்லுநர் ராஜேந்திர சிங் தெரிவித்தார்.

"வாட்டர் மேன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங், வன விலங்குகளின் நலனிற்காக பாடுபட்டு வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒருநிகழ்ச்சியில், புலிகள் பாதுகாப்பு தொடர்பான சேவைக்காக இவருக்கு ரூ. 50,000 பரிசு வழங்கப்பட்டது. மத்திய தலைமை தேர்தல் ஆணையர்எம்.எஸ்.கில்லிடமிருந்து இந்தப் பரிசை அவர் வாங்கினார்.

தனக்குக் கிடைத்த இந்தப் பணத்தைத் தற்போது குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள வன விலங்குகளின் பராமரிப்பிற்காக வழங்குவதாகஅறிவித்துள்ளார் ராஜேந்திர சிங்.

தனது நன்கொடை குறித்து அவர் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு வாழும் விலங்குகளுக்கு என்னஆனது என்றே தெரியவில்லை. அவர்களின் நலனிற்காக இந்த உதவியைச் செய்துள்ளேன் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+