"குப்பை யைக் கொட்டுகிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அபாயகரமான வேதிப் பொருட்களைக் கொண்டு வந்து குவிப்பதாகஅமெரிக்கா மீது அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர்.
மெர்க்குரி போன்ற நச்சுப் பொருட்களை இந்தியா உள்பட வளரும் நாடுகளில் குவிப்பதால், அந்நாட்டின்சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து 20 டன் எடையுள்ள மெர்குரி, ஓரிங்க்டன் நகரிலிருந்து இந்தியாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்தப் பொருள், தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள தெர்மோமீட்டர் தயாரிப்புநிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
செஸ்பரோ பான்ட்ஸ் என்ற இந்த நிறுவனம், இங்கிலாந்தின் யூனிலீவர் நிறுவனத்தின் கிளையாகும். உலகிலேயேஅதிக அளவிலான தெர்மோமீட்டர்கள் இந்த நிறுவனத்தில்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெர்க்குரி போன்றவை மிகவும் ஆபத்தானவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடியவை. இவற்றை இந்தியாபோன்ற வளரும் நாடுகளில் குவிப்பதால், அந்நாடுகளின் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படும் என்று இந்தஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications