ஒரு சிசுவின் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
பலான்பூர் (குஜராத்):
குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பாலஸ்வா கிராமத்தில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த கான்கிரீட் சுவர்கள் மற்றும் இரும்புக்கம்பிகளுக்கிடையில் ஒரு வாரமாக உயிருக்குப் போராடிய 11 மாதக் குழந்தையை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர்.
இடிந்து தரைமட்டமான தனது வீட்டில் சுவர்களுக்கிடையில் போராடிக் கொண்டிருந்த தேஜல் என்ற 11 மாதக் குழந்தை சனிக்கிழமை மாலைமீட்கப்பட்டது. தேஜல் மீட்கப்பட்டதையடுத்து அந்த கிராம மக்கள் பூமித்தாய்க்கு நன்றி கூறி பூஜை செய்தனர்.
பாபுபாய் பிரஜாபதி என்பவரின் குழந்தைதான் தேஜல். தற்போது ராதான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கா தேஜல் சேர்க்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications