ரஜினியிடம் மோசடி .. நரசிம்ம ராவ் மகன் கைது
ஹைதராபாத்:
தமிழக நடிகர் ரஜினி காந்திடம் 2.6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மகனும் ஆந்திராவின் முன்னாள் கல்விமந்திரியுமான டாக்டர்.பி.வி.ரங்கா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகவேந்திராவின் தீவிர பக்தரான ரஜினி காந்திடம் ராகவேந்திரா மகாத்மியம் என்ற திரைப்படத்தில் நடிக்க ரங்கா ராவ் கேட்டபோதுமறுத்துவிட்ட ரஜினியிடம் படத் தயாரிப்புச் செலவிற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதனை ஒப்புக் கொண்ட, ரஜினியும் 2.6 கோடி ரூபாய் வரை பணம்கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்டபின் படத்தை தயாரிக்காமல் தன் சொந்த கடன்களை அடைக்க அப்பணத்தை ராவ் பயன்படுத்தியுள்ளார். படம்தயாரிக்கப்படாததை அறிந்து ரங்காராவிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் ரஜினி.
அதற்காக ரங்காராவ் கொடுத்த இரண்டு காசோலைகளும் ரங்காராவின் கணக்கில் பணமில்லாததால் திரும்பிவிட்டன. இதனையடுத்து ஹைதராபாத்போலீசில் ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ரங்காராவையும், அவரின் உதவியாளர் கோபால கிருஷ்ண ரெட்டியையும் 15நாள்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இருவரின் ஜாமீன் கோரிக்கையையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். எனினும், ராவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ராவை மருத்துவபரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications