குஜராத்திற்கு ரூ. 1 கோடி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள், ரூ. 4 கோடி மதிப்புள்ள ஜமக்காளங்கள் ஆகியவற்றைபூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திற்கு தமிழக அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இதுவரை குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு ரூ. 13 கோடிவசூலாகியுள்ளது. இன்னும் தொடர்ந்து நிதி வந்து கொண்டிருக்கிறது என்றார்.

இதற்கிடையே, தமிழ்நாடு நிவாரண அதிகாரிகள் சங்கம் சார்பில் குஜராத்திற்கு ரூ. 30 லட்சம் நிதியுதவிஅளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் 15,000 ஊழியர்கள் சேர்ந்து இந்த நன்கொடையை அளித்துள்ளனர்.

பண உதவி தவிர, ஆடைகள், இயந்திரங்கள் ஆகியவற்றையும் குஜராத்திற்குக் கொடுக்க இந்த அமைப்பு முடிவுசெய்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதியுதவி செய்யுமாறு,தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 11-ம் தேதி தியேட்டர்களில் வசூலாகும் டிக்கெட் கட்டணத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்துவிலக்கு அளித்து அந்தப் பணத்தை நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதிக்கு இந்தஅமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+