அமெரிக்க உதவி வந்தது
அகமதாபாத்:
அமெரிக்காவிலிருந்து 4, சி-17 ரக விமானங்களில் 1 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்கள் அகமதாபாத் வந்துள்ளன.
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் வீடுகளை இழந்தவர்களுக்காக இந்த விமானங்களில் ஆயிரக்கணக்கில் கம்பளிகள், போர்வைகள்,தலையணைகள் ஆகியவை வந்துள்ளன.
இதுகுறித்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் பிரிவு செய்தித் தொடர்பாளர் டாம் க்ரெளசன் கூறுகையில், 92 பெரிய கூடாரங்கள் அமைப்பதற்கானபொருட்கள், 10,000 கம்பளிகள், தூங்குவதற்குத் தேவைப்படும் தலையணை, போர்வைகள் 10,000 ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளோம். குடிநீர்விநியோகம் செய்வதற்கான 2 இயந்திரங்களையும் நாங்கள் கொணடு வந்துள்ளோம் என்றார்.
இவைதவிர வெள்ளிக்கிழமை 20 பேர் கொண்ட அமெரிக்க மருத்துவக்குழுவும் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் மோர்பி ஆகிய நகர்களுக்குவந்தனர்.
ரஷ்யா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து மீட்புக்குழுவினர், மோப்பநாய்ப்படை, மருத்துவக்குழுவினர் ஆகியோர் ஏற்கனவேஅனுப்பப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் விமானநிலைய இயக்குநர் சிட்காரா கூறுகையில், பொதுவாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு தினமும் 14 முறை விமானங்கள் வந்துபோகும். ஆனால் இங்கு பூகம்பம் ஏற்பட்டதையடுத்து எங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளது. வெவ்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுவரை 44 சர்வதேச விமானங்கள் நிவாரணப் பொருட்களைஏற்றிக் கொண்டு வந்துள்ளன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications