ஆஸி.யை வெல்ல முயன்ற ஜிம்பாப்வே
பெர்த்:
பரபரப்பான கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று நாடுகள் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, துவக்க ஆட்டக்காரர்டேமியன் மார்ட்டினின் (144) சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே 303 ரன்கள் எடுத்து வெற்றி பெறுவது கடினம் என்று எதிர்பார்த்த வேளையில் அனுபவ ஆட்டக்காரர்கள் கிராண்ட் பிளவரும்(85)ஸ்டூவர்ட் காலிஸூம்(119) இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 185 ரன்கள் எடுத்தனர்.
49வது ஓவரின் கடைசி பந்தில் அணித்தலைவர் ஸ்டீரிக்கை இழந்த போதும் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மெக்ராத் வீசிய கடைசி ஓவரில் 13ரன்களை எடுத்த ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரின் இறுதி போட்டிக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீஸும் தகுதி பெற்று விட்டன.












Click it and Unblock the Notifications