வேன் - பஸ் மோதல் ... 7 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த வேன், பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர்.

சென்னையில் நடக்கும் திருமணத்திற்காக வேலூர் ராணிப்பேட்டை காரை மேட்டுக் காலனியைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் சென்னை சென்றனர்.ராணிப்பேட்டை கீரம்பாடி அருகே வேன் சென்று கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வேலூர் வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது வேன் நேருக்கு நேராகமோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பிச்சைமுத்து (20), சங்கர், (30), ஜீவா (40), சம்பத் (39), பொன்னி (40), பட்டம்மாள் (30), புனிதா (25)ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேனின் ஓட்டுநர் கருணாகரன் படுகாயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் பேருந்திலும்,வேனிலும் பயணம் செய்த மேலும் 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வாலாஜா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+