பா.ம.க. பாண்டி மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல்
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பதில் பா.ம.க. குறியாக இருக்கிறது. முதல்வர் பதவியையும் சில முக்கியதொகுதிகளையும் பா.ம.க.வுக்கு கொடுப்பதற்கு பாண்டிச்சேரியில் கண்ணனால் துவங்கப்பட்ட பாணடிச்சேரி மக்கள்காங்கிரசில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பும் பா.ம.க. தனக்கு வெற்றி கிடைக்கும் என சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறது.
காசுக்கடை, உப்பளம், உழவர்கரை. குருவிநத்தம், நெட்டப்பாக்கம் போன்ற சில குறிப்பிட்ட இடங்களில்கண்ணனுக்கு செல்வாக்கு இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் எண்ணுகின்றனர். இந்த தொகுதிகளில்போட்டியிட சிலர் விருப்பம் தெரிவித்து சீட் ரிசர்வ் செய்துள்ளனர்.
இந்த தொகுதிகளை கொடுக்க பா.ம.க. மறுத்து வருகிறது. இந்த தொகுதிகளில் பா.ம.க.வுக்கு செல்வாக்குஇருப்பதாக அந்த கட்சியினர் கருதுவதால் அவர்கள் இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.மேலும் நெட்டப்பாக்கம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்தான் பாண்டியில் பா.ம.க. முதல்வராக வருவார்எனவும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்த 3 தொகுதிகள் காரணத்தால் பா.ம.க.வுக்கும், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே விரிசல்ஏற்பட்டுள்ளது.
பா.ம.க.வுடன் சேர்வதால் தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகள் கிடைக்காது எனவும் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ்கட்சியினர் சிலர் கருதுகின்றனர். இதனால் பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.
கண்ணனுக்கு முதல்வர் பதவி என்பது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இப்போது பா.ம.க.வுடன்கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் முதல்வர் பதவி பா.ம.க.வுக்கே செல்லும் என்பதால் அக்கட்சியுடன்கூட்டணி அமைப்பது குறித்து கண்ணன் மறு பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications