பா.ம.க. அமைச்சர்கள் ராஜினாமா .. என்ன காரணம்?
சென்னை:
மத்திய அமைச்சரவையிலிருந்து பொன்னுசாமியும், சண்முகமும் திங்கள்கிழமை ராஜினாமா செய்ததை அரசியல்பார்வையாளர்கள், தாங்கள் எதிர்பார்த்தது தான் என கூறியுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி தான், சேலத்தில் தான் தோல்வியடையக் காரணம் என வாழப்பாடி ராமமூர்த்தி குற்றம்சுமத்தியுள்ளார்.
மத்திய அமைச்சரவையிலிருந்து பா.ம.க. அமைசர்கள் ராஜினாமா செய்தது பா.ம.க., தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து விலகுவதற்கான அறிகுறி எனவும், அக்கட்சி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாதலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இணைவதற்கான முதற் கட்ட நடவடிக்கை எனவும் கருதப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பா.ம.க. அமைச்சர்கள்ராஜினாமா செய்திருப்பது பல அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ம.க., மத்தியில் ஆளும் வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ. கூட்டணியுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளது.ஆனாலும் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் சுமுகமான உறவு இல்லை.
இதற்கு காரணம் பா.ம.க.வுக்கும், தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான தமிழக ராஜீவ்காங்கிரஸ் கட்சியுடன் இருந்த வந்த மோதல்தான்.
பா.ம.க., த.ரா.கா.வை தே.ஜ. கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என வெளிப்படையாக கூறி வந்தது. மேலும்த.ரா.கா. தே.ஜ. கூட்டணியில் நீடித்தால் அந்த கூட்டணியில் பா.ம.க. இருக்காது எனவும் ராமதாஸ் கூறி வந்தார்.
பா.ம.க.நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிதான்,வாழப்பாடி ராமமூர்த்திக்கு ஆதரவு அளித்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். தே.ஜ. கூட்டணி கட்சிகள்கூட்ட வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
பா.ம.க. அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி ஜெயலலிதாவுடனான பேச்சு வார்த்தைக்கு வழிவகுத்துள்ளது என கூறப்பட்டாலும் அதை ஜெயலலிதாவே மறுத்துள்ளார்.
பா.ம.க. அமைச்சர்களின் ராஜினாமா, ராமதாஸ், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கானவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க கூட்டணிக்கு தேவையான அளவு தொகுதிகளை கொடுக்க ஜெயலலிதாஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தே.ஜ. கூட்டணியை விட்டு விலகும் முன் அமைச்சர்களை ராஜினாமாசெய்ய சொல்லுமாறு ஜெயலலிதாதான் ராமதாசிடம் கூறினார் எனவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது ராமாதாசுக்கும், ஜெயலலிதாவுக்கும் சுமுகமான உறவு இருந்து வந்தது.பா.ம.க. தி.மு.க.தலைமையிலான கூட்டணிக்கு வந்த பிறகும் ஜெயலலிதாவை தாக்கி கடுமையான அறிக்கைகள்எதையும் வெளியாடமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பா.ம.க. அமைச்சர்கள் ராஜினாமா மூலமாககூட்டணி மாற்றங்கள், புதிய கூட்டணி உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையிலிருந்து பா.ம.க. அமைச்சர்கள் விலகியதும், அதற்கு பல்வேறு காரணங்கள் காரணங்கள்கற்பிக்கப்படுகின்றன. பல்வேறு கற்பனைகளும் குவிந்து வண்ணம் உள்ளன. உண்மை நிலை தெரிய சில நாட்கள்ஆகும். பொறுத்திருந்து பார்ப்போம்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications