வீரப்பனை விரைவில் பிடிப்போம் ... டி.ஜி.பி
சென்னை:
கேரள வனப்பகுதியில் உள்ள வாளையார் காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸார் சுற்றி வளைத்துவிட்டனர். வீரப்பன் எந்த நேரத்திலும் பிடிபடலாம் என்று தமிழக போலீஸ் டிஜிபி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் 31 ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பன், கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரை அவரது காஜனூர் பண்ணை வீட்டிலிருந்து கடத்தினார்.109 நாட்கள் காட்டுவாசத்திற்குப்பிறகு வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை விடுவித்தார்.
இதையடுத்து, வீரப்பனைப் பிடிப்பதில் கர்நாடக அரசும், தமிழக அரசும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளன. சத்யமங்கலம் காட்டுக்குள்தீவிரவேட்டையை மேற்கொண்டு வந்தன. எல்லைப் பாதுகாப்புப் படையினரும், அதிரடிப்படையினரும் வீரப்பனைத் தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டனர்.இந்த நேரத்தில் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் கேரள காட்டுப்பகுதிக்குத் தப்பித்துச் சென்று விட்டனர் என்று தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து கேரள போலீஸாரின் உதவியுடன் கர்நாடக, தமிழக போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில்வெள்ளிக்கிழமை மாலை வீரப்பன் கும்பலைப் போலீஸார் சுற்றி வளைத்து விட்டதாகத் தகவல்கள் கிடைத்தது.
இதற்கிடையே சனிக்கிழமை ஹெலிக்காப்டர் மூலம் வீரப்பன் பதுங்கியிருக்கும் வாளையாறு காட்டுப்பகுதியில் தமிழக டி.ஜி.பி.ராஜகோபலான்சுற்றிப்பார்த்தார். அவருடன் தமிழக, கர்நாடக மற்றும் கேரள உயர் போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்.
பின்னர் சென்னை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். வாளையாறு காட்டுப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸாரிடம் கூறுகையில்,நீண்ட தாடியுடன் வந்த ஒருவரும், அவருடன் வந்த மேலும் சிலரும் எங்கள் வீட்டுக்கு வந்து, அரிசியும், சமையல் பொருட்களும் கேட்டார்கள். நாங்கள்கொடுக்கும் வரை அவர்கள் பொறுமையாக இருந்து அரிசியையும், பிற பொருட்களையும் வாங்கிச் சென்றார்கள் என்றார்.
பின்னர் அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த அனைத்து மக்களும் வீரப்பனைப் பார்த்தாகத் தகவல் கொடுத்தார்கள். அதனால் அதிரடிப்படைப் போலீஸார்வீரப்பன் அப்பகுதியில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
இன்னும் சில நாட்களில் வீரப்பனைப் பிடித்து விடுவோம். தற்போது, அதிரடிப்படையினர் செமாந்திமலை, வாளையாறு ஆகிய பகுதிகளில் தீவிரமாகரோந்து சுற்றி வருகின்றனர். அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது வீரப்பனின் ஆட்கள் உணவுப் பொருட்கள் மற்றும் தங்களிடமிருந்தபிற பொருட்களை அங்கேயே போட்டு விட்டுத் தப்பித்து விட்டார்கள்.
அவர்கள், கேமரா, வாக்கி டாக்கி, டிஜிட்டல் டைரி, செல்லுலார் போன், வாக்மென் ஆகியவற்றை விட்டு விட்டுச் சென்றார்கள். டைரியில் வீரப்பன்குறித்த விஷயங்கள் இருக்கலாம் என்று கருதுகிறோம். விரைவில் வீரப்பனைப் பிடிப்போம் என்றார் ராஜகோபாலன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications