பட்டவர்கள் உதவுகிறார்கள்
சாம்ஹியாலி (குஜராத்):
மகாராஷ்டிராவில் 1993 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிவர்கள், இப்போது குஜராத்மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
1993 ல் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 9,600 பேர் உயிரிழந்தனர். அப்போதுமகாராஷ்டிராவில் 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பூகம்பத்தால் அழிந்தன. தாங்கள் பாதிக்கப்பட்டபோது இருந்தவலியை குஜராத் மக்களும் அனுபவப்பார்கள் என்பதை உணரந்த லத்தூரைச் சேர்ந்த 125 பேர் குஜராத் மக்களுக்குஉதவ முன்வந்துள்ளனர்.
லத்தூர் குழுவைச் சேர்ந்த ஷேக் முன்னா கூறுகையில், பூகம்பத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு முதலில்பள்ளிகள் கட்டிக் கொடுக்க வேண்டும். முடிந்த அளவு விரைவில் பள்ளிகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும்.அப்போதுதான் பள்ளி மாணவ, மாணவியர் விரைவில் பள்ளிக்குச் செல்ல முடியும்.
லத்தூரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அங்குள்ள வீடுகள் களிமண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்டிருந்ததால்இடிபாடுகளை அகற்றுவது மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவீடுகள் அனைத்தும் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருப்பதால் இடிபாடுகளை அகற்றுவது மிகவும் சிரமமாகஇருக்கிறது என்றார்.
லத்தூர் குழுவின் தலைவர் சாந்திலால் முத்தா கூறுகையில், ஒவ்வொரு நாளும் நிவாரணப் பணிகள் முடிவடைந்தபின், மாலையில் அனைவரும் ஒன்றாகக் கூடி அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்துமுடிவெடுக்கிறோம். குறைந்தது 15 கிராமங்களில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளோம்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சாம்ஹியாலி கிராமம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கட்ச்மாவட்டத்திலுள்ள பச்சாவ் நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாம்ஹியாலி கிராமம். இங்குள்ளஇடிந்து போன பள்ளியை மீண்டும் கட்டிக் கொடுக்கும் பணியை லத்தூர் குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
லத்தூர் குழுவினர், இந்த கிராமத்துக்குக் கடந்த 28-ம் தேதியே வந்து விட்டனர். இங்கு அரசு நிவாரணப் பணிகள்இன்னும் தொடங்கவில்லை. இங்கு முகாமிட்டுள்ள லத்தூர் கிராம மக்கள் சாம்ஹியாலி மட்டுமின்றி அதனைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications