காஷ்மீரை விட்டு வெளியேறுவோம் ... சீக்கியர்கள்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் சனிக்கிழமை 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டதையடுத்து ஒரு பகுதி சீக்கியர்கள் தாங்கள் ஜம்மு நகருக்கும், மற்ற பகுதிகளுக்கும்குடியேறப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சீக்கிய தலைவர் ஹர்பல் சிங் கூறுகையில், எங்களுக்கு காஷ்மீரில் பாதுகாப்பு இல்லை. அதனால் ஸ்ரீநகருக்கோ அல்லது வேறு இடங்களுக்கோகுடிபெயர இருக்கிறோம். இது குறித்த இறுதி முடிவு அரசுடன் கலந்து ஆலோசித்த பின் இந்த மாதம் 11-ம் தேதி முடிவு செய்வோம் என்றார்.
இந்த கருத்து ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சக்சேனாவும், மாநில முதல்வர் பரூக் அப்துல்லாவும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு ஆறுதல் கூற வந்தசமயத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பரூக் அப்துல்லா அங்கு வந்த போது சீக்கியர்கள் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி அவரை சுற்றி வளைத்துக் கொண்டு அரசு எங்களைபாதுகாக்கத் தவறி விட்டது என கோபக் குரல் எழுப்பினர்.
பாது காப்பு படையினர் சக்சேனாவையும், பருக் அப்துல்லாவையும் கும்பலிலிருந்து மீட்க கடும் சிரமப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மத்திய குழுவின் தலைவரான ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சரும் கோபம் கொண்டசீக்கியர்களின் கடும் கண்டனத்துக்குள்ளானார்கள். நாங்கள் இங்கே இருக்க மாட்டோம். நாங்கள் வெளியேற ஏற்பாடு செய்யுங்கள் என கோஷம்எழுப்பினர்.
அனைத்து சீக்கியகுருத்துவார தலைவர்களையும் சந்தித்த பின் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை ஹர்பல்சிங் படித்தார் அந்த அறிக்கை கூறப்பட்டிருப்பதாவது:
காஷ்மீரில் இருக்கும் சீக்கியர்கள் ஜம்முவுக்கும், வேறு பல இடங்களுக்கும் குடிபெயர முடிவு செய்துள்ளனர். தற்போது காஷ்மீரில் பண்டிட்களுக்கும்,ஜம்முவுக்கு குடி பெயர்ந்துள்ள முஸ்லிம்களுக்கும் கொடுப்பது போன்ற பாதுகாப்பு எங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.கோபமடைந்த சீக்கியர்களிடம் சக்சேனா கூறுகையில், குடிபெயர்வர்களை நாங்கள் தடுக்க முடியாது என்றார்.
பரூக் அப்துல்லா கூறுகையில், நீங்கள் குடிபெயர்வது பாகிஸ்தானியர்களுக்கு சாதகமாக அமையும். கோபத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் நாட்டுக்குநன்மை பயக்காது. குடி பெயர்வது மட்டுமே இந்த பிரச்சனைக்கு முடிவாகாது. சீக்கியர்கள் வாழும் பகுதிகளுக்கு அரசு பலத்த பாதுகாப்பு அளிக்கும்என உறுதி கூறினார்.
நால்வர் குழுவில் இடம் பெற்றிருக்கும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சமான் லால் குப்தா கூறுகையில், சீக்கியர்கள்காஷ்மீரில் இருக்க வேண்டியது அவசியம் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications