மீள்கிறது மின் வசதி
மும்பை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அஞ்சார் நகரில் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தேசிய மின்உற்பத்திக் கழகமும், மின் விநியோக நிபுணர்களும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய மின்சார உற்பத்திக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அஞ்சார் நகரில் மின்விநியோக நிலையம் ஒன்றை இவர்கள் அமைத்துள்ளனர். தேசிய மின் உற்பத்திக் கழகம் (என்.டி.பி.சி.) மற்றும்மின் விநியோக அமைப்பு ஆகியவற்றில் உள்ள என்ஜினியர்கள் குழு, நாகட்ரானா, மாதாப்பூர், கோல்டா மற்றும்கேடோய் நகரங்களில் மின் விநியோகத் துணை நிலையங்களை அமைத்துள்ளனர்.
அங்கிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. லாக்கோன்ட் மற்றும் தோதாய் ஆகிய இடங்களிலும்மின்சார விநியோக துணை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 85 என்ஜினியர்கள் குஜராத் மாநிலத்தில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய மின் உற்பத்திக் கழகம் சார்பில் 35 லாரிகளில் 70,000 கிலோ உணவுப் பொருட்கள், 4,200 கம்பளிகள்,சால்வைகள், புடவைகள், 300 கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளது.
இவை தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குசேர்க்கப்படும் காயமடைந்தவர்களுக்கு 8 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
என்.டி.பி.சி. சார்பில் இடிபாடுகளை நீக்குவதற்காக இரண்டு கிரேன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. என்.டி.சி.பி.யின்பொதுமேலாளர் ஜெயின் பாதிக்கப்பட்ட பூஜ் மற்றும் பிற பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் என்றுகூறப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications