கோவையில் சுதேசி தொழில் கண்காட்சி
சென்னை:
கோவையில் நடைபெறும் சுதேசி தொழில் கண்காட்சி 2001 துவங்கி வைக்க பிரதமர் தமிழகம் வருகிறார்.
சுதேசி ஜாக்ரான் மஞ்சின் ஒரு பிரிவான கோவை பாரதீய விற்பனை மேம்பாடு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியை பிப்ரவரி 16ம் தேதிபிரதமர் துவக்கி வைக்கிறார்.
இந்தியாவிற்கேற்ற இந்திய தொழில்கள் மற்றும் சுதேசி தொழிலே பிரதானம், வெளிநாட்டு தொழில்கள் சுதேசிக்கு உறுதுணையாக அமையுமேதவிர சுதேசிக்கு மாற்று அல்ல என்ற கருத்துடன் இக்கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
இந்தியர்களால் நடத்தப்படும் பல்வேறு வகையான சுதேசித் தொழில்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் அவற்றின் வளர்ச்சிக்காக இக்கண்காட்சிநடத்தப்படுகிறது.
பல்வேறு வகை தொழில் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் இடம்பெறும்.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, பவானி,நாமக்கல், ஹோசூர்,ராணிப்பேட்டை,சென்னை, மதுரை, திருச்சி,தூத்துக்குடி,விருதுநகர், சிவகாசி போன்ற பலபகுதிகளில் உள்ள மரபு வழித்தொழில்கள் பற்றியும் அதன் நிலை பற்றியும் இக்கண்காட்சியில் விளக்கப்படும்.
இக்கண்காட்சியில் பன்னாட்டுக்கம்பெனியின் தயாரிப்புகள் எவ்வாறு உள்ளூர் தயாரிப்புகளை பாதிக்கின்றன என்பது பற்றியும் விளக்கப்படும்.
மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரமோத் மகாஜன், சரத் யாதவ், காசிராம் ராணா, மற்றும் டி.ஆர்.பாலுஆகியோர் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.
இத்தகவல்களை சுதேசி ஜாக்ரான் மஞ்சின் கோவை பகுதி அமைப்பாளர் குருமுர்த்தி கண்காட்சி குறித்த நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications