"வீரப்பன் குறித்து தகவல் தந்தால் பரிசு
கோயம்புத்தூர்:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சநதிரே கவுடர்பற்றி தகவல் தருவோருக்கு ரூ 40 லட்சம் பரிசு வழங்கப்படும் என வாளையாறு காட்டுபகுதியில் இருக்கும் கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சங்கேத வார்த்தைகள்கொடுக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணயில் ஈடுபடும் குழுவுக்குஈகிள் எனவும், உயர் அதிகாரிகளுக்கு சீட்டா, டஸ்கர் எனவும் சங்கேத பெயர்கள்கொடுக்கப்பட்டுள்ளன.
100-க்கும் அதிகமான போலீஸ் குழுவினருக்கு வயர்லஸ் மூலம் தகவல் சொல்லும்வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. சங்கேத பெயர்கள், தகவல் தொடர்பு திட்டங்கள்மூலமாக குறிப்பிட்ட அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவு குறிப்பிட்ட அணியினரைசென்றடையும் வசதி ஏற்படும்.
கோவைப் புதூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில்தங்கியிருந்த தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் திங்கள்கிழமை காட்டுக்கு சென்றுவந்தார்.
கோவை வந்த கூடுதல் டி.ஜி.பி.அலெக்சாண்டர், தமிழகம் மற்றும் கர்நாடக சிறப்புஅதிரடிப்படை தலைவரும், தமிழக ஐ.ஜி.யுமான பாலச்சந்திரன் ஆகியோரும்திங்கள்கிழமை காட்டுக்குள் சென்று வந்தனர்.
இவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குஊக்கமளித்து விட்டு வந்தார்கள். மேலும் சென்ற வெள்ளிக்கிழமை வீரப்பன்நடமாட்டத்தை கண்டுபிடித்ததாக கூறிய 13 நபர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ5,000 பரிசாக டி.ஜி.பி. ராஜகோபாலன் கொடுத்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications