கொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்கி 14 பேர் சாவு
கொலம்பியா:
கொலம்பியாவில், இடது சாரி கொரில்லாக்களுடன் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் இரு வேறு சம்பவங்களில் 14பேரைதீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.
கொலம்பிய நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டு போரில் இதுவரை 35,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் அமைதி திரும்ப முயற்சி எடுத்துவரும் கொலம்பிய அதிபர் ஆந்த்ரே பாஸ்த்ரானா தென் கொலம்பியா பகுதியில் தனித்து இயங்கும் கொலம்பியபுரட்சிகர ஆயுதப்படையின் தலைவருடன் நேருக்கு நேர் சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில், 4000 ச.கி.மீ பரப்பளவுள்ள ப்யூர்டோ வில்சஸ், ஆன்டியன் மலைப்பகுதிகளை 5000 போராளிகளை உடைய தேசிய விடுதலைப்படையின் வசம்தற்காலிமாக ஒப்படைக்க அரசு பரிசீலித்து வருகிறது.
அவ்வாறு ஒப்படைத்தால் விடுதலைப்படையினர் வன்முறை மற்றும் ஆட்களை கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர் என்று கூறி அங்குள்ளமக்களில் ஒரு பகுதியினர் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமுற்ற விடுதலைப்படையினர் இத்தாக்குதலை நடத்தியதை மறுப்பதற்கில்லை என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மனித உரிமைக்குழுவினர் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலம்பிய விவசாயிகள் படுகொலையில் கொலம்பிய ராணுவத்துடன்இணைந்து விடுதலைப்படையினருக்கும் பங்குண்டு என்றனர்.












Click it and Unblock the Notifications