இந்தியாவிற்கு இஸ்ரேல் ஏவுகணைகள்
ஜெருசலேம்:
300 மில்லியன் டாலர் மதிப்புள்ள பராக் வகை ஏவுகணைகள் இந்திய கடற்படைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் திரிசூல் வகை ஏவுகணை திட்டம் தாமதமாவதால் இஸ்ரேலிடமிருந்து இவ்வகைஏவுகணைகள் வாங்கப்படுகின்றன.
60 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய இவற்றின் ராடார் அமைப்பு வான் மற்றும் தரைப்பகுதியில் உள்ள இலக்குகளை கண்டறிந்து ஏவுகணைகளைஅனுப்பவல்லது.
இஸ்ரேல் அரசு நிறுவனமான இஸ்ரேல் ஏர்கிராப்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தயாரித்துள்ள இவை பிரான்ஸ் வகை ஏவுகணைகளை விடச் சிறந்தது.
பாரீஸில் நடைபெறும் விமானக் கண்காட்சி போன்று ஆசியாவில் நடைபெறும் பெங்களூர் விமானக் கண்காட்சியில் போருக்கு ஏற்றவகையில்நவீனப்படுத்தப்பட்ட ரஷ்ய வகை ஹெலிகாப்டர்களான எம்.ஐ.17,எம்.ஐ.35 ஆகியவற்றை இஸ்ரேல் காட்சிக்கு வைத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications