பாண்டி. ஆட்சியைக் கேட்கிறது பா.ம.க.?
சென்னை:
பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிமுக வழங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முந்தாநாள் வரை திமுக கூட்டணியில் இருந்து வந்த டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி இப்போதுஅதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நெருங்கி வருவதால், அதிமுக கூட்டணியில்ராமதாஸ் சேர்ந்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இருப்பினும் திடீரென ராமதாஸ் சேர காரணமாக பலவிஷயங்கள் தமிழகத்தில் பேசப்படுகின்றன. வாழப்பாடிராமமூர்த்தி மீதுள்ள கோபம், முதல்வர் கருணாநிதி மீது அதிருப்தி என பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட,மற்றொரு காரணமும், ராமதாஸ் தாவலுக்குக் கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பலமே அதனுடைய ஜாதிதான். வட தமிழ் நாட்டில் பரவலாக உள்ளவன்னிய சமூகத்தினரை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கட்சியே துவங்கப்பட்டது. வன்னிய சங்கமாகஇருந்ததை கட்சியாக மாற்றி ஒரு சக்தியாக மாற்றியது ராமதாஸின் வெற்றி என்றே கூறலாம்.
வட மாவட்டங்கள் தவிர, பாண்டிச்சேரியிலும் வன்னிய சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். எனவேதமிழகத்தோடு, பாண்டிச்சேரியையும் கண் வைத்தவாறே இருந்து வருகிறது பா.ம.க.
முதல் கட்டமாக பாண்டிச்சேரியில் வலுவான அரசியல் தலைவராக உள்ள கண்ணனை அவர் இருந்தகட்சியிலிருந்து இழுத்து வந்தது பா.ம.க. இப்போது அவர் பா.ம.கவுக்கு ஆதரவாக இருக்கிறார். கண்ணனும்வன்னியர்தான்.
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதோடு, பாண்டிச்சேரியில்ஆட்சியைப் கைப்பற்றுவதும் பா.ம.க.வின் முக்கிய நோக்கமாகும். இதன் காரணமாகவே அடிக்கடி,பாண்டிச்சேரியில் முதலில் ஆட்சியைப் பிடிப்போம். அடுத்த தேர்தலில் தமிழகத்தைக் கைப்பற்றுவோம் என்றுஅடிக்கடி கூறுவார் ராமதாஸ்.
தற்போது அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள ராமதாஸ், நிபந்தனையாக, பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும்வாய்ப்பை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரியிருக்கலாம் என்று பேசப்படுகிறது.அதற்கு ஜெயலலிதாவும் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாது, தமிழக சட்டசபைத் தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கவும் ஜெயலலிதாமுடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே, திமுக வை விட்டு உடனடியாக ராமதாஸ்வெளியேறி விட்டார் என்று கூறப்படுகிறத.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications