சபர்மதியில் அஞ்சலி
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள், அகமதாபாத்தில் உள்ள சபர்மதிஆற்றில் புதன்கிழமை கூடி, 12-வது நாள் காரியங்களைச் செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.
குஜராத் பூகம்பத்தில் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்த மக்கள், அனைவரும் கூடி சூரியனை நோக்கிக் கை உயர்த்தி, வேத மந்திரங்கள் ஓதி அஞ்சலிசெலுத்தினார்கள். சபர்மதி ஆற்றில் கூடியிருந்த அனைவரும் வெள்ளை வேட்டி அணிந்து இறுதிச் சடங்குகள் செய்தார்கள்.
தனது சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்த ராஜேஷ் படேல் என்பவர் கூறுகையில், பூகம்பத்தில் எனது கடைசி சகோதரர் முகேஷ் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்து இன்றுடன் 12 நாட்கள் ஆகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். விரைவில் எனது சகோதரர் முகேஷை கனடாவுக்குஅழைத்துச் செல்லலாம் என்று தீர்மானித்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றார்.
திங்கள்கிழமை முதல் சபர்மதி ஆற்றில் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்கான அஸ்தி கரைப்பு மற்றும் இதர சடங்குகள் தொடங்கின. இந்தச் சடங்குகள்வியாழக்கிழமை வரை நடக்கும்.
இதுதவிர விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்காக கோசேன்ட்ரா மடத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் நூற்றுக்கும்மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications