ராமர் கோவில் .. "சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது
மதுரை:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாதுஎன காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கோயில்கட்டப்படுகிறதோ இல்லையோ அங்கு ராமர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுபூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் எவ்வாறு விக்கிரகத்தைஅங்கிருந்து அகற்ற முடியும்.
விஸ்வ இந்து பரிஷத் அங்கு உடனடியாக ராமர் கோயில் கட்டுவதாக கூறவில்லை.சமீபத்தில் அலகாபாத்தில் நடந்த தரம் சம்சாத் கூட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தங்களிடம் அந்த இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் தலைவர்கள் விஸ்வ இந்து பரிஷத்திடம் பேச்சு நடத்த விரும்பவில்லைஎன்றாலும் என்னுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறார்கள்.
காஞ்சி மடம் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கபட்ட கிராமத்தை தத்தெடுத்துக் கொள்ளதயாராக இருக்கிறது என குஜராத் முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்.
ஏற்கனவே மருத்துவர் குழு ஒன்றையும், 100 பேர் கொண்ட மீட்பு குழுவையும்குஜராத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் ரூ 1 லட்சம் நிதி உதவியும்அனுப்பப்பட்டிருக்கிறது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications