கட்டிடத் தொழில் பாதிப்பு
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டுமானத் தொழில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டமாகி விட்டன. பல மாடிக் கட்டிடங்கள், பிளாட்டுக்கள் இடிந்துதரைமட்டமாகி விட்டதால் அவற்றை மீண்டும் கட்டமுடியாமல், விற்பனை செய்யவும் முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பங்களா வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கும், இரண்டு மாடிக் கட்டிடங்களை வாங்க நினைப்பவர்களுக்கும் போதிய கட்டிடங்கள் கிடைப்பதில்லை.இதனால் குஜராத்தில் பங்களா வீடுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்திலுள்ள பால்டி பகுதியைச் சேர்ந்த கட்டிடக் கான்டிராக்டர் ஹர்னீஷ் ஷா கூறுகையில், ஒரு சதுர கிலோ மீட்டர் ரூ 9000 என்று விற்கப்பட்டஅபார்ட்மென்ட்டுகள் தற்போது பாதி விலையாக ரூ 4,500 க்கு விற்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இரண்டு மாடிக் கட்டிடங்கள் உள்ளவீடுகளையே கேட்கிறார்கள்.
பூகம்பம் ஏற்பட்டபின், அபார்ட்மென்டுகள், பிளாட்டுக்களை விற்பனை செய்வதில் எங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும்கான்டிராக்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பணப் பிரச்சனைகளும் பெருமளவில் உள்ளது. கட்டுமான தொழில் மிகவும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் 12,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விற்பனை செய்ய முடியாமல் இருக்கிறது என்றார்.
ரியல் எஸ்டேட் ஏஜன்ட் ஹரீஷ் அஜ்மேரா கூறுகையில், தற்போது இரண்டு மாடிக் கட்டிடங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும்பல மடங்கு அதிகரித்துள்ளது. ரூ 8 லட்சத்துக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த வீடுகளுக்கு தற்போது ஒரு கோடி வரை கேட்கிறார்கள்.
மேலும் பாதி இடிந்த பல மாடிக் கட்டிடங்களை விற்பனை செய்ய பல உரிமையாளர்கள் வருகிறார்கள். பங்களா வீடுகள் மற்றும் மிகப்பெரிய மாடிவீடுகளை விற்கவே பொதுமக்கள் நினைக்கிறார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications