180 ஆண்டுகளுக்குப் பிறகு ...
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ஜனவரி 26 ம் தேதி 40.5 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவுக்குச் சேதம் ஏற்படுத்திய பூகம்பம் 180ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பமாகும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கும் வகையில் சரியாக ஒரு மாதத்திற்கு முன் பூமிக்கடியில் சிறு சிறுஅதிர்வுகள் ஏற்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 26 ம் தேதி இந்த பூகம்பம் ஏற்பட்டது. அந்த அதிர்வானது உணவு தயாராகும் முன் பிரஷர் குக்கர்கொடுக்கும் விசில் சத்தத்தைப் போல எச்சரிக்கை அலாரமாக இருந்தது என்றே கூறலாம்.
பூமிக்கடியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வுகள் 20 மீட்டர் ஆழத்திலும், 60 கிலோ மீட்டர் நீளத்திலும் ஏற்பட்டது. 1819 ம் ஆண்டு இதே போல்,மேற்கு கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஹைதராபாத் தேசிய மண் ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியும், பிரபல மண்ணியல் ஆராய்ச்சி வல்லுநருமான டாக்டர் நேகி கூறுகையில்,டிசம்பர் மாதம் 2000 மாவது ஆண்டு கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் லேசாக ஏற்பட்டது.
இதைத் தெரிந்து கொண்டு குஜராத் அரசு, மீண்டும் பூகம்பத்தால் பாதிப்பு வரலாம் என்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கலாம். மேலும் குஜராத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் சில வினாடிகளுக்கு முன் பூமியில் சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டன.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூகம்பத்தின் பாதிப்பு டெல்லி, ஆரவள்ளி குன்று, கட்ச் வளைகுடா வரை 20 கிலோ மீட்டர் ஆழம் வரை பரவியிருந்ததுஎன்றார். டாக்டர் நேகி 1967 ம் ஆண்டு ஏற்பட்ட கொய்னா பூகம்பம் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். மேலும் அறிவியல் துறையில் பல சாதனைகள்புரிந்ததற்காக சாந்திஸ்வரூப் பக்நாகர் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மண்ணியில் துறை ஆராய்ச்சியாளர்கள், குஜராத் பூகம்பம் 8.0 மற்றும்8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டது எனக் கண்டு பிடித்தனர்.
முன்னதாக, 1819 ம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் தேதி கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பம் 5,000 சதுர கிலோ மீட்டர் வரை உணரப்பட்டது.அதற்குப் பின் அடுத்த 1,500 சதுர கிலோ மீட்டர் வரை உணரப்பட்டது. இந்த பூகம்பம் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதைவிட சக்திவாய்ந்தபூகம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications