உதவுகிறது பிஜி
சுவா:
குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படும் வகையில் 20, 000 டாலர்கள்அளிக்கவுள்ளதாக பிஜி தீவின் இடைக்கால அரசு கூறியுள்ளது.
பிஜித் தீவு அதிபர் ராஜூ ஜோசேபா இலாய்லோ, பிரதமர் லைசேனியா க்வாரசே, வெளியுறவுத்துறை அமைச்சர் காலியோபேட் தோவாலா ஆகியோர்குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு பிஜி மக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக இந்திய அரசுக்கு செய்தி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து பிஜியிலிருந்து குஜராத் பூகம்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் பிஜி அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
அப்போது, பிஜியில் ஏற்கனவே இதுபோன்ற இயற்கைச் சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அதனால் பிற நாடுகளுக்கு திடீரென்று இயற்கைச் சீரழிவுகள்ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக பிஜி அரசு முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்று இயற்கைச் சீரழிவு நிவாரணக் கொள்கைஉருவாக்கப்பட்டது.
1993-ம் ஆண்டு இந்தியாவில் மகாராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள லத்தூரில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 10, 000 பேர் கொல்லப்பட்டனர்.அப்போது பிஜியும் நிவாரண உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் பிஜி தீவைச் சேர்ந்த மக்கள் பலர் வசித்து வருகிறார்கள். பிஜி - குஜராத் சமாஜ் மற்றும் பிஜி செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை குஜராத்தில்பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல் செய்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications