சோகத்திலும் ஹஜ் பயணம்
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் தங்கள் உடைமைகளை இழந்ததை மறந்து, அங்கு வாழும் முஸ்லீம் மக்கள் ஹஜ்பயணமாக மெக்கா மற்றும் மெதினாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்திலுள்ள காவ்டா கிராமத்தைச் சேர்ந்த இஸ்மாயில் பாலூச் கூறுகையில்,அல்லாவை வழிபடுவதற்காக நாங்கள் கண்டிப்பாக ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும். பூகம்பத்தால் உறவினர்கள், உடைமைகளைஇழந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.
குஜராத் மாநில ஹஜ் யாத்திரை கமிட்டி செயலாளர் ஷெரீப் ஷேக் கூறுகையில், இந்த வருடம் குஜராத் மாநிலத்திலிருந்து 700 பேர் மெக்கா செல்ல அனுமதிகிடைத்துள்ளது. இதில் கட்ச் மாவட்டத்திலிருந்து மட்டும் 200 பேர் செல்கிறார்கள்.
இதில் 15 முஸ்லீம்கள் தங்கள் ஹஜ் பயணத்தை ரத்து செய்துள்ளனர். ஏனெனில் அவர்கள் பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்ச்மாவட்டத்திலிருந்து 40 ஹஜ் பயணிகள் வியாழக்கிழமை அங்கிருந்து செல்லும் முதல் விமானத்தில் ஜெட்டா செல்லவுள்ளனர்.
கோலாய், கோசா, கேர்வான் மற்றும் ஜாப்ரவான் கிராமங்களிலிருந்து வரும் 13 ஹஜ் பயணிகளைக் அழைத்துக் கொண்டு செல்லும் ஹாஜி ஹனீப் கூறுகையில்,முஸ்லீம்களாகிய நாங்கள் ஒரு முறை மெக்கா செல்ல திட்டமிட்டபின் எந்தத் தடங்கல் வந்தாலும் அந்தப் பயணத்தை ரத்து செய்யக் கூடாது என்றார்.
ஹஜ் பயணிகள் மெக்கா செல்வதற்காக அகமதாபாத் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹஜ் பயணிகளை வழியனுப்பவரும் அவர்களது உறவினர்களுக்காகவும் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் ஹஜ் பயணிகளுக்குப் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்தவருடமும் அப்படி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications