மனிதன் டைனோசராகி விடுவான் .. விஞ்ஞானி எச்சரிக்கை
கோவை:
உலகம் முழுவதும் ஒரே சீரான முறையில் இயற்கையை பாதிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில்,ஒவ்வொரு உயிரினமும் டைனோசரைப் போலவே மறைந்து போகும் அபாயம் ஏற்படும் என கனடா நாட்டு கோல்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவையில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.
கோவையில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு வருகை தந்த கனடா நாட்டுக்கோல்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜார்ஜ் பேசியதாவது:
உயிரினங்களில் 99 சதவீதம், இயற்கைக்குத் தீங்கு செய்யாதவை, மனிதன் மட்டுமே இயற்கையை அழித்து, தன் தேவையைப்பூர்த்தி செய்துகொள்ள முயல்கிறான். உலகில் எந்த உயிரினமும் இயற்கைக்குத் தீங்கு செய்வதில்லை. அவை இயற்கையோடுஒன்றி வாழ்கின்றன. கிடைத்ததை உண்டு வாழ்கின்றன.
சில மிருகங்கள் மட்டுமே பிற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது சிறப்பு உயிரினஉரிமையில் அனைத்தையும் தன் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றன. இதனால், இயற்கையின் சமச்சீரமைப்பு மாறி விடுகிறது.
பூச்சிகளில் 99.9 சதவீதம் மனிதனுக்குத் தீங்கு செய்யாதவை. இதில் 0.1 சதவீதம் மட்டுமே தீமையை ஏற்படுத்துகின்றன. இவற்றைஅழிக்க மனிதன் டி.டி.டி என்ற மருந்தைப் பயன்படுத்தினான். ஆனால், அதனால் மனிதனுக்கே தான் தீங்கு ஏற்பட்டுள்ளது.புற்றுநோய் வரக் காரணமாக இது அமைந்து விட்டது.
பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. இதனால் தைராய்ட் சுரப்பியில் மாற்றம்ஏற்படுகிறது. இதனால், 8 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பு எய்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் மக்கள் தொகையில் அமெரிக்காவில் 4 சதவீதம் மட்டுமே உள்ளனர். ஆனால் இவர்கள், 23 சதவீதம் கார்பன் டைஆக்சைடை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அதேசமயம், மற்ற நாடுகளை கார்பன் டை ஆக்சைட் பயன்பாட்டைக் குறைக்கச்சொல்கிறது அமெரிக்கா.
உலகம் முழுவதும் ஒரே சீரான முறையில் இயற்கையை பாதிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில்,ஒவ்வொரு உயிரினமும் டைனோசரைப் போலவே மறைந்து போகும் அபாயம் ஏற்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications