வெள்ளை மாளிகை அருகே திடீர் பரபரப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் மாளிகை அருகே துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட ராபர்ட் பிக்கெட் என்பவரை பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அமெரிக்க ரகசியசேவைப் படை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது.
கைத்துப்பாக்கியை கீழே போட மறுத்த அவரை முழங்காலிற்கு கீழே சுட்ட அப்படையினர் அவரை கைது செய்தனர். பின்னர் ஜார்ஜ் வாஷிங்கடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை நன்றாக உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஏரி பிளெஸ்ஷர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற போது அதிபர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதிபரின் மனைவி டெகஸாஸில் இருந்தார். துணை அதிபர் டிக் செனி அவருடையஅலுவலகத்தில் பணியிலிருந்தார். இது பற்றிய தகவல் பின்னர் அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் செயலாக இருக்க வாய்ப்பில்லை என்ற பிளெஸ்ஷர் மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார். அதிபரை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதுவரை இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. வெள்ளை மாளிகையில் 1995ல் ஒரு பைலட் சிறு விமானமொன்றை மோதச் செய்து அதில் உயிரிழந்தார்.அதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர் அமெரிக்க வருவாய்த்துறையில் பணிபுரிந்து 1980ல் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பணிநீக்கத்தை எதிர்த்து அவர் செய்தமுறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனால் அவருக்கிருந்த கோபத்தை காட்டவோ, அல்லது மற்றவர்களின் அனுதாபத்தை பெறவோ அவர் இவ்வாறு செய்திருக்கக்கூடும் என்றுஅவரைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications