அழிந்த ஆலயங்கள்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் அங்குள்ள பல கோயில்கள், மசூதிகள் மற்றும்சர்ச்சுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
பான்கோர்நாகாவில் உள்ள 575 ஆண்டு பழமை வாய்ந்த ஜூம்மா மசூதி படுசேதமடைந்தது. அது தவிர ராஜ்கோட்,கட்ச் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் உள்ள 450 க்கும் மேற்பட்ட மசூதிகளில் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து, சன்னி முஸ்லீம் வக்ப் பிரிவு கமிட்டி செயலாளர் லைட்வாலா கூறுகையில், 1425 ம் ஆண்டு பேரரசர்அகமது ஷாவால் ஜூம்மா மசூதி கட்டப்பட்டது. பல பகுதிகள் கடும் சேதமடைந்துள்ள இந்த ஜூம்மா மசூதியைமீண்டும் பழுது பார்ப்பது மிகவும் கடினமான பணியாகும்
இந்த மசூதி தவிர 500 ஆண்டு பழமை வாய்ந்த கோம்டிபூரிலுள்ள பிபிஜி மசூதியும் சேதமடைந்துள்ளது. இங்குள்ளமிகப்பெரிய 18 மசூதிகள் பாதி சேதமடைந்தோ அல்லது முழுவதுமாக சேதமடைந்தோ உள்ளது. பழுது பார்க்கமுடியாத அளவுக்கு இவைகள் சேதமடைந்துள்ளன.
தாவார்க்காவில் உள்ள கிருஷ்ணா கோவில் உள்பட பெரும்பாலான கோவில்கள் கடுமையாகச்சேதமடைந்துள்ளன. மாநிலத்தில் 7 கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிந்து விழுந்துள்ளது.
ஜமாத் ஈ இஸ்லாமி துணைச் செயலாளர் அப்துல் கயாம் கூறுகையில், கட்ச் மாவட்டத்தில் மட்டும் 450 மசூதிகளில்பல மசூதிகள் சேதமடைந்துள்ளன. பிற பகுதிகளில் 60 க்கும் மேற்பட்ட பல மசூதிகள் சேதமடைந்துள்ளன.
விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் பிரவீன் டோகாடியா கூறுகையில், பூஜ்ஜில் உள்ள சுவாமி நாராயணாகோவில் மற்றும் அஞ்சாரில் உள்ள ஒரு கோவிலும் முழுவதுமாக இடிந்து விட்டன.
கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் தவிர குஜராத் மாநிலத்தில் 1,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகச்சேதமடைந்துள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பல கோவில்கள், மசூதிகள் ஆகியவை சேதமடைந்துள்ளனஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications