ஐ.நா.வின் "ஷொட்டு
பூஜ் (குஜராத்):
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, குஜராத் அரசு சர்வதேச நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் நிவாரணஉதவிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்து வருகிறது என்று ஐ.நா.பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐ.நா.வில் உள்ள இயற்கைச் சீற்ற நிவாரணக் குழுத் தலைவர் எட்வர்டு பியாரன் கூறுகையில், இது போன்று திடீரென்று ஏற்படும் இயற்கைச்சீற்றங்களைச் சமாளிப்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.
குஜராத் அரசு போதுமான அளவு நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது. போட்டி போட்டுக் கொண்டு சர்வதேச நாடுகள் செய்யும் உதவிகளை முறையாகப்பெற்று, அவற்றைப் பாதிககப்டட மக்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்கிறது.
உலக உணவுக் கழகத்திலிருந்து அனுப்பப்படும் உணவுப் பொட்டலங்களும் சரியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தில் ஏற்பட்டபூகம்பத்தால் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
கிராமங்கள், நகரங்களில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை கட்டுவதற்குப் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். இடிபாடுகளுக்கிடையில்கிடக்கும் சடலங்களை அகற்றுவது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குசிகிச்சை அளிப்பதே எங்களது முதல் குறிக்கோளாகும் என்றார்.
பியாரனும், அவரது குழுவினரும் கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பொருட்களைவிநியோகித்து வரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்ச் மாவட்டத்தில் மட்டும் பூகம்பத்தால் 20,000 க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு நிவாரண நடவடிக்கைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications