எலக்ட்ரானிக் இயந்திரங்களை ஏமாற்ற முடியுமா?
சென்னை:
எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடந்தால் முறைகேடுகள் எதுவும் நடக்க வாய்ப்புக்கள் இல்லைஎன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருதுஞ்ஜய் சாரங்கி வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு எலக்ட்ரானிக் இயந்திரங்களைப் பயன்படுத்தினால்அதிக அளவுகள் முறைகேடுகள் ஏற்படும் என்று அதிமுக பொதுச் செயாளர் ஜெயலலிதா, இந்திய தலைமைதேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்லிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் கூட எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் நடக்கும் தேர்தல்களில் பலமுறைகேடுகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மின்னனுக் கழகம் மற்றும் பி.எச்.ஈ.எல் நிறுவனத்தார்தான் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தருகிறார்கள்.இதனால் தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது முறைகேடுகளோ நடக்க வாய்ப்பில்லை. எங்களுக்குக்கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிப்படி இந்த இயந்திரங்களால் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்று நம்புகிறோம்.
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்கத் தெரிந்த திறமை வாய்ந்த நிபுணர்கள் இருந்தால் இதில்முறைகேடுகள் ஏற்படவே வாய்ப்புக்கள் இல்லை.
இதே போல் அண்ணா நகரிலிருந்து மத்திய சென்னைக்கு வீடு மாற்றியுள்ள சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறைஆற்காடு வீராசாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர்களை அண்ணா நகர் வாக்காளர் பட்டியிலிலிருந்து ஏன்நீக்கக்கூடாது என்று ஆற்காடு வீராசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தவறுதான்.
அவர் வீடு மாற்றியதற்காக அவரது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது. இதுகுறித்து விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா நகரில் 96,000 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதும் இது போன்றதவறுகளால் நடந்திருக்கலாம்.
தமிழகத்தில் 42 சட்டசபைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடைந்துவிட்டது. அங்கு கள்ள ஓட்டுக்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றார் சாரங்கி.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications