பூசாரிகளுக்கு வாரியம் தேவை .. சங்கராச்சாரியர்
மதுரை:
பல்வேறு அமைப்புகளுக்கும் நலவாரியம் அமைத்துக்கொடுக்கும் அரசு கிராமக் கோவில் பூஜாரிகளுக்காக தனி நல வாரியம் ஒன்று அமைக்கவேண்டும் தமிழக அரசை காஞ்சி சங்கராச்சாரியார் கேட்டுக்கொண்டார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அடுத்த மாதம் கிராமக் கோவில் பூஜாரிகள் மதுரையில் கூடிஅவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவர் என்றார்.
கோவில் நிர்வாகிகளை அரசு நியமிக்கும்பொழுது இந்து கலாசாரத்தின்மீது பற்றுள்ள ஆன்மீகவாதிகளை நியமிக்க வேண்டும். மேலும் அவர்கள் கோவில்மேம்பாட்டிற்கு உதவுபவராக இருப்பது அவசியம்.
கிராமங்களில் 1முதல் 5 வகுப்புகள் வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் அமைக்க காஞ்சி மடம் முன்வரும், அதற்காக ஒரு ஏக்கர்நிலத்தை இலவசமாக அரசு வழங்க வேண்டும். இது போன்ற 6பள்ளிகள் ஏற்கனவே தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்தெரிவித்தார்.
தலித்துக்கள் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுவதை எதிர்த்த சங்கராச்சாரியார் இந்து தலித்துகளின் மேம்பாட்டிற்காககொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டை இந்துக்களல்லாத தலித்துக்களும் கேட்பது சரியல்ல என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications