முருகனின் 7-வது படை வீட்டில் தேரோட்டம்
கோவை:
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலை முருகன்கோயிலில் தேரோட்டம் நடந்தது.
முருகனின் ஆறு படை வீடுகளுக்கு அடுத்தபடியாக ஏழாவது படை வீடாகக் கூறப்படுவது மருதமலை முருகன்கோயில் ஆகும். மருதமலை மீது அமர்ந்து அருள் பாலிக்கும் முருகனுடைய இந்த தலத்தில், ஆடிக் கிருத்திகையும்,தைப்பூசமும் சிறப்பாக கொண்டாடப்படும்.
840 படிகளைக் கடந்து மலை மீது சென்று முருகனை வழிபட வேண்டும். இந்த முருகன் கோயிலில் புதிய கோயில்கட்டும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
கட்டட வேலைகள் நடந்து வருவதால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது தேரும் புதுப்பிக்கப்பட்டுதைப் பூச நிகழ்ச்சியை ஒட்டி மலை மீது தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
தேரோட்ட நிகழ்ச்சிக்கு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிவடம் பிடித்துத் துவக்கி வைப்பதாக இருந்தது. மாலை 6.30 மணிக்குத் தேரோட்டம் துவங்கவிருந்தது. ஆனால்,அமைச்சர் பழனிச்சாமி வர காலதாமதம் ஆனது. இதனால் அங்கு வந்த பக்தர்கள் அனைவரும்அதிர்ச்சியடைந்தனர். மேலும், இக்கோயில் கோவையிலிருந்து 15 கிமீட்டருக்கு மேல் தூரத்தில் உள்ளது.
போதுமான போக்குவரத்து வசதி இல்லததால், பக்தர்கள் தவிக்கத் துவங்கினர். இந்த தேரோட்ட நிகழ்ச்சியில்அமைச்சர் வருகையால் தாமதமடைந்த பலர் எரிச்சலடைந்து, தேரோட்ட நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க முடியாமல்சென்று விட்டனர்.
அறநிலையத் துறை அதிகாரிகள் ஒரு தி.மு.க அமைச்சருக்காக கோயில் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்ததுபொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரைத் திருப்திப் படுத்த எண்ணிய அதிகாரிகள்,பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்றுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications