நிதி நெருக்கடியில் குஜராத்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் மாநிலத்தின் பொருாளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும் முதல்வர் கேசுபாய் படேல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் மாநிலமாக விளங்கி வருவது குஜராத். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதையடுத்து, முதல்வர் கேசுபாய்படேலும், அவரது நிதி ஆலோசகர் ஷெலாட்டும் பூகம்பத்தால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது, குஜராத் மாநிலத்துக்கு பூகம்பத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சமாளிக்க இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். மேலும் அடுத்த2 அல்லது 3 வருடங்களில் குஜராத்துக்கு ரூ 300 பில்லியன் தேவைப்படும் என்று கணக்கிட்டார்கள்.
இருவரும் நடத்திய ஆலோசனைக்குப்பின் முதல்வர் கேசுபாய் படேல் நிருபர்களிடம் கூறுகையில், பூகம்பத்தால் குஜராத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவைச்சமாளிக்க பல வகைகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்துறையில் 1,160 பில்லியனும், சமுதாய வளர்ச்சிக்காக ரூ 483. 13 பில்லியனும்குஜராத் அக்ரோவிஷன் 2010 என்ற வேளாண்மைத்துறை வளர்ச்சிக்காக ரூ 382.97 ம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது குஜராத் மாநிலத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனை மாநிலத்தில் விரிசல் விழுந்த சாலைகள், இடிந்த பாலங்கள், கல்வி நிலையக் கட்டிடங்கள்,சேதமடைந்த அரசு அலுவலகக் கட்டிடங்கள், வர்த்தகத்தை முன்னேற்றுவது, தொழில்துறையை முன்னேற்றுவது ஆகியவையே ஆகும். இதற்காக ரூ 300பில்லியன் தேவைப்படும்.
கட்ச் மாவட்டத்தில் வாழும் செளராஷ்டிர மக்களின் உயிர்நாடியாகக் கருதப்பட்ட கைத்தறி தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குமிகவும் பிரபலமாக விளங்கிய ரசாயன தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து தரமற்றரசாயனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் 50 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அதிக வருமானம் வரும் தொழில்துறையான ஜவுளி தொழிற்சாலை மற்றும் வைர தொழிற்சாலைகள் மிக மோசமான பேரழவை சந்தித்துள்ளன. சூரத்,பலான்பூர் பகுதிகளில் உள்ள வைரத் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு விட்டன. சில தொழிற்சாலைகள் பாதி ஆட்களுடன் செயல்பட்டு வருகின்றன. இதுகுஜராத் மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார் முதல்வர் கேசுபாய் படேல்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications